உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை பருவத மலையில் விஜயேந்திரர் சுவாமிகள் கிரிவலம்

திருவண்ணாமலை பருவத மலையில் விஜயேந்திரர் சுவாமிகள் கிரிவலம்

திருவண்ணாமலை: கலசப்பாக்கம் அடுத்த, தென்மாதிமங்கலம் பஞ்சாயத்தில் உள்ள
பருவதமலையை, மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு, விஜயேந்திர சுவாமிகள் கிரிவலம் செல்கிறார்.

திருவண்ணாமலை மாவட்டம், தென்மாதிமங்கலம் பருவத மலை மீது மரகதாம்பிகை சமேத மல்லிகார்ஜுன சுவாமி கோவில் உள்ளது. 25 கி.மீ., தூரமுள்ள பருவத மலை கிரிவலப்பாதை யில், 1944 மார்கழி, 1ல் காஞ்சி காமகோடி பீடாதிபதி மகா பெரியவர் சுவாமிகள் கிரிவலம் சென்றார். இதன் நினைவாக, ஆண்டுதோறும் காஞ்சிபுரம் சங்கர மடம் சார்பில், இதன் மடாதி பதி தலைமையில் மார்கழி, 1ல், பக்தர்களுடன் கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.

இதையொட்டி,  சங்கர மடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரர் தலைமையில், பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். கிரிவலத்தின்போது, காஞ்சிபுரம் மகா பெரியவர் சங்கராச்சாரியா ரின் பஞ்சலோக சிலை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கொண்டு செல்லப்படும். ஏற்பாடுக ளை திருவண்ணாமலை, போளூர் சங்கரமட நிர்வாகிகள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !