பழநி திருஆவினன்குடி கோயிலில் சனிப் பெயர்ச்சி விழா
ADDED :3016 days ago
பழநி: சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு பழநி திருஆவினன்குடி கோயிலில் சனீஸ்வரர் பகவானுக்கு சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடந்தது.
காலை 10.01மணிக்கு,விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம்பெயரும் சனிஸ்வர பகவானை தரிசிக்க, பழநி திருஆவினன்குடி கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சனீஸ்வரர் பகவானுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சனீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.