உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கனூர் திருவக்கரை வக்ரகாளியம்மன் கோயிலில் 1008 பால்குட ஊர்வலம்

திருக்கனூர் திருவக்கரை வக்ரகாளியம்மன் கோயிலில் 1008 பால்குட ஊர்வலம்

திருக்கனூர் : திருவக்கரை வக்ரகாளியம்மன் வழிபாடு நற்பணி மன்றம் சார்பில், 17ம் ஆண்டு 1008 பால்குட ஊர்வலம் நடந்தது.

திருக்கனூர் முத்து மாரியம்மன் கோவில் வளாகத்தில் துவங்கிய பால்குட ஊர்வலத்தை, செல்வம் எம்.எல்.ஏ., கோவில் நிர்வாகிகள் துரைராஜன், கண்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இதில், மாலை அணிந்து விரதம் இருந்த பொதுமக்கள் 1008 பால் குடத்துடன், சித்தலம்பட்டு, புதுக்குப்பம், கொடுக்கூர் வழியாக திருவக்கரைக்கு சென்று, வக்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.

தொடர்ந்து, ஊர்வலத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

ஏற்பாடுகளை வக்ரகாளியம்மன் வழிபாடு நற்பணி மன்ற நிர்வாகிகள் ரங்கநாதன், செல்வம், பாபு, சந்தோஷ், பாஸ்கர் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !