உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர், ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியன்று லட்டு தயாரிப்பு துவக்கம்

திருப்பூர், ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியன்று லட்டு தயாரிப்பு துவக்கம்

திருப்பூர்: திருப்பூர், ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியன்று பக்தர்களுக்கு வழங்க, ஒரு லட்சத்து 18 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி இன்று துவங்குகிறது.

திருப்பூர் ஸ்ரீவாரி டிரஸ்ட் தலைவர் பலராமன், துணை தலைவர் செல்வம் கூறியதாவது:

வரும், 29ம் தேதி, அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு முதல், மாலை வரை, பரமபத வாசல் வழி யாக வரும் பக்தர்களுக்கு, லட்டு வழங்கப்படும்.

இதற்காக, இன்று காலை, 8:00 மணி முதல், 1,18,000 லட்டு தயாரிக்கும் பணி, பழைய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் நடக்கிறது.

மேலும் விவரங்களுக்கு, 0421- 242 4401 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர்கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !