தர்ம சாஸ்தா ஆசிரமத்தில் படி பூஜை விழா கோலாகலம்
ADDED :2844 days ago
சேலம்: தர்ம சாஸ்தா ஆசிரமத்தில், படிபூஜை விழா கோலாகலமாக நடந்தது. சேலம், டவுன் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள, தர்ம சாஸ்தா ஆசிரமத்தில், 10ம் ஆண்டு புஷ்பாஞ்சலி மற்றும் படிபூஜை விழா, நேற்று நடந்தது. அதையொட்டி, காலை, தர்ம சாஸ்தாவுக்கு நெய் அபிஷேகம், 51 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. மதியம், சின்னக்கடை வீதி வேணுகோபால சுவாமி, கன்னிகா பரமேஸ்வரி, ராஜகணபதி கோவில்களிலிருந்து, தேர்வீதி வழியாக, ஆசிரமத்துக்கு, திருவாபரணப் பெட்டிகள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. மாலை, சிறப்பு பஜனை, புஷ்பாஞ்சலி நடந்தது. தொடர்ந்து, தீபாராதனை காட்டப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு, கோவிலில் உள்ள, 18 படிகள், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, படி பூஜை விழா நடந்தது. அதில், திரளானோர் சுவாமியை தரிசித்தனர்.