செஞ்சி கோட்டை வீர ஆஞ்சநேயருக்கு புத்தாண்டை முன்னிட்டு நவதானிய அலங்காரம்
செஞ்சி: செஞ்சிக்கோட்டை வீர ஆஞ்சநேயர் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு 50 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் சாமி தரிசனம் செய்தனர். செஞ்சிக் கோட்டை வீர ஆஞ்சநேயருக்கு ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனமும், நவதானிய அலங்காரமும் செய்தனர். காலை 6 மணிக்கு மகா தீபாராதனை செய்து பக்தர்கள் சாமி தரிசனம் துவங்கியது. மாலை வரை நீண்ட வரிசையில் நின்று 50 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தொடர் அன்னதானம் வழங்கினர். விழா ஏற்பாடுகளை செஞ்சிக்கோட்டை வீர ஆஞ்சநேயர் கோவில் வழிபாட்டு மன்றம், அருணாச்சலேஸ்வரர் கோவில் திருப்பணிக்குழுவினர், கமலக்கன்னியம்மன் கோவில் விழாக்குழுவினர் செய்திருந்தனர். எஸ்.பி., ஜெயக்குமார் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ் இயக்கினர்.