உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம்: பக்தர்கள் பரவசம்

சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம்: பக்தர்கள் பரவசம்

சென்னை: சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் எனும், நடராஜர் திருவாதிரை திருவிழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. அதிகாலை முதல் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

பிரதான சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் எனும், நடராஜர் திருவாதிரை திருவிழா நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும், திருவாதிரை நட்சத்திரம் அன்று, சிவாலயங்களில், ஆருத்ரா தரிசன விழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், நடராஜர் திருவாதிரை திருவிழா, சென்னை, மதுரை, கோவை மற்றும் அனைத்து பகுதியில்  உள்ள சிவாலயங்களில் கொண்டாடப்படுகிறது. சிதம்பரம் நடராஜர், உத்தரகோசமங்கை மரகத நடராஜர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். சென்னை திருவொற்றியூர், தியாகராஜ் சன்னிதியில் அதிகாலை நான்கு மணிக்கு சிறப்பு வழிபாடுகளுடன் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. ஏராளமான பகதர்கள் தரிசனம் செய்தனர்.  சிவன் கோவில்களில், தொன்மையான மருந்தீசுவரர் கோவிலில் திருவாதிரை திருவிழாவை யொட்டி, அதிகாலை, 4:00 மணிக்கு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 6:00 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், வீதி உலா உற்சவமும் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !