உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்தாண்டு தரிசனம்: உல்லன் நூல் அலங்காரத்தில் லலிதா செல்வாம்பிகை அருள்பாலிப்பு

புத்தாண்டு தரிசனம்: உல்லன் நூல் அலங்காரத்தில் லலிதா செல்வாம்பிகை அருள்பாலிப்பு

செஞ்சி: செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகைக்கு புத்தாண்டை முன்னிட்டு உல்லன் நூலில் சிறப்பு அலங்காரம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை அம்மன் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து உல்லன் நுால் மற்றும் மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்தனர். அறங்காவலர் கன்னியப்பன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜைகளை ஈஸ்வர குருக்கள் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !