திருவாதிரை தரிசனம்
ADDED :2880 days ago
திருஞான சம்பந்தர் சிவஞானப்பால் அருந்தியது திருவாதிரைத் திருநாளில்தான். தில்லை கனகசபையில் நடராஜர் பிரபஞ்ச நடனமாடி தரிசனம் கொடுத்தது திருவாதிரையில் தான். இது ஆருத்ரா தரிசனம் எனப்படும். ஆருத்ரா என்றால் ஆதிரை என்று பொருள். ஆதிரை சிவபெருமானின் நட்சத்திரம். இராவணன், சூரபத்மன், இரண்யன் போன்ற அசுரர்கள் தேவர்களைத் துன்புறுத்திய போது தேவர்கள் ஓடி ஒளிந்த இடம் திருவாதிரை நட்சத்திர மண்டலம். பிரதோஷ நேரத்திலும், திருவாதிரை நட்சத்திர நாளிலும் ஈஸ்வரன் அபயகரத்துடன் அருள்பாலிப்பார்.