தீயில் தோன்றிய சபாபதி
ADDED :2880 days ago
சத்தியலோகத்தில் பிரம்மா நடத்திய யாகத்திற்கு தில்லைவாழ் அந்தணர் மூவாயிரம் பேரை அழைத்தார். ”தில்லையில் இருந்து,நடராஜரின் திருநடனம் காண்பதை விட, யாகத்தால் எங்களுக்கு என்ன பலன் கிடைக்க போகிறது” என பிரம்மாவை கேட்டனர். அங்கு தோன்றிய நடராஜர், யாகத்திற்கு செல்லும்படியும், யாகத்தின் முடிவில் அங்கு காட்சியளிப்பதாகவும் வாக்களித்தார். அவ்வாறு தீயில் வெளிப்பட்ட நடராஜர் ’ரத்தின சபாபதி’ என அழைக்கப்பட்டார். இவரது சிலை சிதம்பரம் நடராஜரின் சிலையின் கீழ் உள்ளது. தினமும் காலை 10:00 - 11:00 மணிக்குள் இவருக்கு சிறப்பு பூஜை நடக்கும். இந்த நடராஜரின் சிலைக்கு முன்புறமும், பின்புறமும் தீபாராதனை காட்டி வழிபடுவர்.