அஷ்டமி பிரதட்சணை அம்பாள் வீதி உலா!
ADDED :5057 days ago
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோவில், அஷ்டமி பிரதட்சணத்தையொட்டி, நேற்று சுவாமி, அம்பாள் முக்கிய வீதிகளில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில், மார்கழி மாத அஷ்டமி பிரதட்சணத்தை முன்னிட்டு, நேற்று அதிகாலை 2 மணிக்கு, கோவில் நடை திறந்து, ஸ்படிக லிங்க பூஜை நடந்தது. தொடர்ந்து, காலை 7 மணிக்கு, ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, பஞ்ச மூர்த்திகளுடன் நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்து, பக்தர்களுக்கு படியளந்து அருள் பாலித்தனர். பகல் 12 மணிக்கு மேல், பஞ்ச மூர்த்திகள், கோவிலை வந்தடைந்த பின், மீண்டும் நடை திறக்கப்பட்டு, சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டதை தொடர்ந்து, பக்தர்கள் வழக்கம் போல் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்தனர்.