நாயன்மார் குருபூஜை
ADDED :2873 days ago
நாயன்மார்: அப்பூதி அடிகள்
சிறப்பு: மகன் இறந்ததை மறைத்து திருநாவுக்கரசருக்கு உணவு படைத்தவர்
நட்சத்திரம்: சதயம்
நாள்: ஜன.20
நாயன்மார்: கலிக்கம்ப நாயனார்
சிறப்பு: அடியவர் வடிவில் வந்த பணியாளரை வணங்கி உபசரித்தவர்
நட்சத்திரம்: ரேவதி
நாள்: ஜன.23
நாயன்மார்: கண்ணப்ப நாயனார்
சிறப்பு: காளத்தியப்பருக்கு தன் கண்ணையே கொடுத்தவர்
நட்சத்திரம்: மிருகசீரிடம்
நாள்: ஜன.28
நாயன்மார்: அரிவாட்டாய நாயனார்
சிறப்பு: பூஜைப்பொருள் மண்ணில் சிந்தியதால் தன் கழுத்தையே அறுத்துக் கொண்டவர்
நட்சத்திரம்: திருவாதிரை
நாள்: ஜன.29
நாயன்மார்: சண்டேஸ்வரர்
சிறப்பு: அபிஷேக பால்குடத்தை உதைத்த தந்தையின் காலை வெட்டியவர்
நட்சத்திரம்: உத்திரம்
நாள்: பிப்.4
நாயன்மார்: திருநீலகண்டர்
சிறப்பு: இளமையில் மனைவியைத் தீண்டாமல் இல்லறம் நடத்தியவர்
நட்சத்திரம்: விசாகம்
நாள்: பிப்.8