சோரப்பட்டு பாரதி பள்ளியில் வேளுக்குடி கிருஷ்ணன் உபன்யாசம்
ADDED :2884 days ago
புதுச்சேரி: சோரப்பட்டு பாரதி ஆங்கில உயர்நிலைப் பள்ளியில், வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசம் நடந்தது.சோரப்பட்டு கிராமவாசிகள், பாரதி ஆங்கில உயர்நிலை பள்ளி, கடலுார் ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு விழா குழு இணைந்து, உபன்யாசம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.சோரப்பட்டு பாரதி ஆங்கில உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் மூன்று நாட்கள் நடந்த உபன்யாச நிகழ்ச்சியில், 108 திவ்யதேச மஹாத்மயம் என்ற தலைப்பில், வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.நிகழ்ச்சியில் சோரப்பட்டு கிராம முக்கியஸ்தர்கள், பாரதி பள்ளி நிர்வாகி சம்பத், தலைமையாசிரியை சுசீலாசம்பத் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.