உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம்

பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம்

பழநி: தைப்பூசவிழா பக்தர்கள் வருகை, ஞாயிறு விடுமுறை தினத்தில், பழநி முருகன் கோயில் அதிகாலை முதல் குவிந்த பக்தர்கள் மூன்று மணிநேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.தைப்பூசவிழாவை முன்னிட்டு, பழநிமுருகன் மலைக்கோயிலுக்கு பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. நேற்று ஞாயிறு பொதுவிடுமுறையில் மலைக்கோயிலில் காலை முதல் குவிந்த பக்தர்கள் ’ரோப்கார்’, வின்ச் ஸ்டேஷனில் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக வரிசையில் காத்திருந்தனர். மலைக்கோயில் பொதுதரிசனம் வழியில் மூன்று மணிநேரம் வரை காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். இதை போல தங்கரதப் புறப்பாட்டை காணஏராளமான பக்தர்கள் திரண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !