வேலூரில் 1,008 சுமங்கலி பூஜை
ADDED :2814 days ago
வேலூர்: வேலூரில், 1,008 சுமங்கலி பூஜை நடந்தது. வேலூர் அடுத்த, திருமலைக்கோடி ஓம் சக்தி நாராயணி பீடத்தில், 18ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, உலக நன்மைக்காகவும், இயற்கை வளங்களுக்காகவும் நேற்று, 1,008 சுமங்கலி பூஜை நடந்தது. சக்தி அம்மா துவக்கி வைத்த பின், பக்தி சொற்பொழிவு ஆற்றினார். ஏராளமானோர் கலந்து கொண்டனர்.