உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா துவக்கம்

மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா துவக்கம்

கோவை : மருதமலை சுப்ரமணிய சுவாமி தைப்பூச தேர்த்திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது; திருக்கல்யாண உற்சவம், திருத்தேர் வடம் பிடித்தல் வரும் 31ம் தேதி நடக்கிறது.

முருகப்பெருமானின் ஏழாவது படை வீடாக, மருதமலை கருதப்படுகிறது. இங்கு தைப்பூச தேர் திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக, நேற்று இரவு விநாயகர் பூஜை மற்றும் வாஸ்து சாந்தி நடந்தது. காலை 7.30 மணிக்கு, கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து, ஹோம உற்சவம் நடந்தது. பின், வள்ளி, தெய்வானை சமேதராக சுப்ரமணிய சுவாமி திருவீதி உலா வந்தார். இன்று முதல் காலை மற்றும் மாலையில், சுவாமி திருவீதி உலா நடக்கிறது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !