மகாபாரதத்தில் கந்தன்
ADDED :3209 days ago
வனவாசம் சென்ற தர்மரிடம், மார்க்கண்டேய மகரிஷி கந்தப்பெருமானின் வரலாற்றை எடுத்துரைத்தார். சிவபார்வதி, அக்னி, கங்கை, கார்த்திகைப்பெண்கள், இந் திராதிதேவர்கள் ஆகியோருக்கும் முருகனுக்கும் உள்ள தொடர்பை அதில் விளக்குகிறார். மகாபாரத வனபர்வத்தின் கடைசி அத்தியாயத்தில் கந்தனின் திருநாம ங்கள், துதிப்பாடல்கள் இடம்பெற்றுள்ளன. கந்தனின் பெருமைகளைக் குறிப்பிடும் பத்து அத்தியாயங்கள் அதில் உள்ளன. மூவுலகத்திலும் புகழ் பெற்ற கந்தனுக்கு இந்திரன், தன் பதவியை வழங்கினான். ஆனால், கந்தன் பெருந்தன்மையோடு இந்திர பதவியை ஏற்கவில்லை. தேவர்களின் சேனாதிபதியாக பதவியேற்றதால், கந்தனுக்கு தேவசேனாபதி என்ற பெயர் ஏற்பட்டது.