வெற்றி நகரில் தைப்பூசம்
ADDED :3209 days ago
தேவர்களைக் கொடுமைப்படுத்திய சூரபத்மனை முருகப் பெருமான் சம்ஹாரம் செய்த தலம் திருச்செந்துõர். முருகன் தன் படையுடன் வந்து தங்கியதால் ஏற்பட்ட பெயரே படைவீடு. மற்ற முருகன் தலங்களை படைவீடு என்று குறிப்பிட்டாலும் திருச்செந்துõருக்கே அது பொருந்தும். தேவதச்சனான விஸ்வகர்மா மூலம் படைவீடு அமைத்து தங்கிய முருகன், தேவகுருவாகிய வியாழபகவான் மூலம் அசுரர்களின் வரலாற்றை அறிந்து கொண்டதாக தலவரலாறு கூறுகிறது. திருச்செ ந்துõர் என்பதற்கு புனிதமும் வளமும் பொருந்திய வெற்றிநகரம் என பொருள். தைப்பூசத்தன்று இங்கு சிறப்பு பூஜை நடக்கும்.