பொங்கு சனீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா கோலாகலம்!
ADDED :5086 days ago
திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுக்கா திருக்கொள்ளிக்காடு அருள்மிகு மிருதுபாத நாயகி உடனுறைகின்ற அக்னீஸ்வரர் திருக்கோவில் 1, 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோவிலில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் சனிஸ்வர பெருமான் பொங்கு சனிஸ்வரராக காட்சியளிக்கின்றார். சனிபெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு வேள்வி நடந்தது. தொடர்ந்து அபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் காலை 7.51 மணிக்கு கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு சனி பகவான் பெயர்ந்தார். தொடர்ந்து தீபாராதனையும் சிறப்பு அர்ச்சனையும் நடந்தது. இதில் திருவாரூர் கலெக்டர் முனியநாதன், எஸ்.பி., அண்ணாதுரை, ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி இயக்குனர் வெங்கடாச்சலம், மாவட்ட வழங்கல் அலுவலர் துரைபாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.