உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தண்ணீரின் முக்கியத்துவம்

தண்ணீரின் முக்கியத்துவம்

நாயகம் ஒரு முறை ஒரு வீட்டிற்கு சென்றிருந்தார். அவ்வீட்டில் ஒரு குவளை தண்ணீர் வாங்கி குடித்தார். குடித்து முடித்ததும், “இப்போது நான் பருகிய தண்ணீருக்காக அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லாவிட்டால் மறுமை நாளில் இதனை குறித்து கேள்வி கேட்பான்,” என்றார்.இதில் இரண்டு முக்கிய கருத்துகள் உள்ளன.

உலகில் தண்ணீரை போல உயர்ந்த பொருள் எதுவும் இல்லை. மயக்கமடைந்து கிடக்கும் ஒருவன் முகத்தில் தண்ணீர் தெளிக்கிறார்கள். அவன் உடனே கண்விழிக்கிறான். அவனுக்கு சிறிது தண்ணீர் புகட்டுகிறார்கள். அவன் சுதாரித்துக் கொண்டு எழுகிறான். இது தண்ணீரை பாதுகாக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்துகிறது.

சிலர் அற்பமாக தண்ணீரை  பார்க்கின்றனர். “சாதாரண தண்ணீரைத் தானே இறைவன் கொடுத்தார். இது என்ன பெரிய விஷயம்! நமக்கென்ன பொன்னையும், பொருளையுமா அள்ளி கொடுத்தார்,” என்று எண்ணுகிறார்கள். இது மிக தவறு.  பொன்னை விட தண்ணீர் பெரிதானது என்பதை இப்போது நாம் உணர்ந்துகொண்டிருக் கிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !