உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதல் வணக்கம் இடும்பனுக்கே!

முதல் வணக்கம் இடும்பனுக்கே!

தண்டாயுதபாணி கோயிலுக்கு செல்லும் வழியில் இடும்பனுக்கு சந்நிதி இருக்கிறது. இடும்பன் தோளில் சக்திகிரி, சிவகிரி என்னும் இரண்டு மலைகளை சுமந்து வந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவரது சந்நிதி எதிரில் நந்தி வாகனமும், இடும்பன், கடம்பன் பாதமும் இருக்கிறது. இடும்பனுக்கு பூஜைசெய்த பின்பே, முருகனுக்கு பூஜை நடக்கிறது. தினமும் அதிகாலை 3:௦௦ மணிக்கு இவருக்கு அபிஷேகம் செய்து, 5:௦௦ மணிக்கு பூஜை செய்வர். அதன் பின்பே மலைக்கோயிலில் முருகனுக்கு பூஜை நடக்கும். காவடி தூக்கிச்செல்லும் பக்தர்கள் இவரது சந்நிதியில் பூஜை செய்து, பேட்டை துள்ளிய (நடனம்) பின்பே செல்கின்றனர். இடும்பன் சந்நிதியில் அவரது குரு  அகத்தியர் உள்ளார். அருகில் இடும்பனும், கடம்பனும் உள்ளனர். இங்கு அகத்தியர் இருப்பதால், பக்தர்களுக்கு கமண்டலத்தில் நிரப்பப்பட்ட தீர்த்தம் தரப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !