உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருவாய் வருவாய் குகனே

குருவாய் வருவாய் குகனே

எங்கிருந்தாலும் திருத்தணி என்ற பெயரை  உச்சரித்தாலும், கேட்டாலும், நினைத்தாலும், வணங்கினாலும் புண்ணியம் கிடைக்கும். இத்தலத்தின் பெருமையையும், மகிமையையும் வள்ளிக்கு, முருகனே எடுத்துச் சொன்னதாக வரலாறு.  சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துச்சுவாமி தீட்சிதர் திருத்தணி முருகனின் அருள்பெற்ற அடியார்களில் ஒருவர்.  ஒருமுறை முருகன் சன்னதி முன் தியானித்த போது, பாலகனாய், அவர் முன் தோன்றி கற்கண்டு கொடுத்தார். உடனே முருகனைப் பற்றி பல கீர்த்தனைகளை தீட்சிதர் பாடினார். தம் கீர்த்தனைகளில் “குருகுஹ” என்று முருகனை போற்றுகிறார். அவரையே குருவாக ஏற்றார். சிறந்த குரு கிடைக்காத பட்சத்தில் திருத்தணி முருகனை மானசீக குருவாக ஏற்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !