உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பண்பொழி குமாரசாமி கோயில்

பண்பொழி குமாரசாமி கோயில்

திருநெல்வேலி மாவட்டம், தென்காசியிலிருந்து 12 கி.மீ., துாரமுள்ள பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயில் விசாக நட்சத்திரத்தில் பிறந்தோருக்கான பரிகாரத் தலம். ‘வி’ என்றால் மேலான, ‘சாகம்’ என்றால் ‘ஜோதி’, விசாக நட்சத்திரம் விமலசாகம், விபவசாகம், விபுலசாகம் என்று மூன்று வகையான ஒளிக்கிரணங்களை உடையது. இந்த கிரணங்கள் இம்மலையில் படுவதால், இந்த நட்சத்திரக்காரர்கள் வாழ்நாளில் ஒரு முறை தரிசிக்க வேண்டும். 500 அடி உயரத்தில், 544 படிகளுடன் அமைந்த குன்றுக்கோயில் இது. மலைக்குச் செல்ல வாகன வசதி உள்ளது. விசாகம், கார்த்திகை, உத்திரம் நட்சத்திரங்கள் முருகனுக்கு உகந்தவை.

முற்காலத்தில் இந்த நட்சத்திர நாட்களில் இம்மலையில் தங்களது முழு ஆதிக்க த்தையும் வெளிப்படுத்தும் ஓட வள்ளி, நளமூலிகை, திருமலைச்செடி ஆகிய மூலிகைகள் வளர்ந்தன. முன்பு செல்வ விருத்திக்காக, திருமலைச் செடியின் வேரையும், தனகர்ஷண யந்திரத்தையும் சேர்த்து, முருகனுக்கு பூஜித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !