மருதமலை மாமணி
ADDED :3204 days ago
கோவையிலிருந்து 11 கி.மீ., தொலைவில் உள்ளது மருத மலை முருகன் கோயில். ‘மருதாச்சலமூர்த்தி’ என இவரை அழைக்கின்றனர். மலையடி வாரத்தில் தான்தோன்றி
விநாயகர் சுயம்புவாக (தானாகவே தோன்றியவர்) உள்ளார். மலைப்பாதையின் நடுவில் இடும்பன் சன்னதியும், மேலே பாம்பாட்டிச் சித்தர் குகையும், சுனையும், மருததீர்த்தமும் உள்ளன. மருத்துவ குணம் கொண்ட தீர்த்தம் இது. மூலஸ்தானத்தில் நான்கு அடி உயரத்தில் முருகப்பெருமான் காட்சி தருகிறார். ஆனந்தக்கூட்டம் என்ற இனத்தவர் இவரிடம் உத்தரவு கேட்காமல் எச்செயலும் செய்வதில்லை. இத்தலத்திற்கு அருகிலுள்ள வெள்ளியங்கிரி மலை சிவபெருமானாகவும், நீலிமலை அம்பிகையாகவும், நடுவேயுள்ள மருதமலை முருகப்பெருமானாகவும் இருப்பதாக ஐதீகம்இவ்வாறு மலைகளின் அமைப்பே சோமாஸ்கந்த வடிவில் உள்ளது.