ஓம் முருகா
ஒரு முறை பிரம்மன், முருகனை பாலகன் என்று நினைத்து வணங்க மறுத்தார். ஆணவத்துடன் சென்ற பிரம்மனை அழைத்து ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்துக்கு விளக்கம் கேட்டார் முருகன். விளக்கம் தெரியாது விழித்தார் பிரம்மன். அவரை தலையில் குட்டி சிறையிலடைத்ததோடு, படைக்கும் தொழிலையும் தானே ஏற்று நடத்தினார். பிரம்மனை விடுவிக்கும்படி திருமால் உட்பட தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். “என்னையும் முருகனையும் வேறுவேறாக நினைப்பவர்கள் இன்பமடைய மாட்டார்கள் என்பதை உணர்த்தவே பிரம்மனைச் சிறையிலடைத்தான் முருகன். வணங்கவில்லை என்பதற்காக அல்ல” என்றார் சிவன். முருகனிடம் பிரம்மனை விடுவித்து ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தின் உட்பொருள் அறிந்தவராக இருந்தாலும் தன் மகன் முருகனிடமே உபதேசம் பெற்றார் சிவன். குழந்தைகள் சொல்வது நமக்கு தெரிந்த விஷயம் தான் என்றாலும், பொறுமையுடன் கேட்டால், அவர்களின் கல்வி ஞானம் பெருகும்.இதை உலகுக்கு உணர்த்தவே இதனை சிவன் செய்ததாக சொல்வதுண்டு. சுவாமியாகிய சிவனுக்கே மந்திர உபதேசம் செய்ததால் ‘சுவாமிநாதன்’ என அழைக்கப்பட்டார்.