உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேலுண்டு வினையில்லை! மயிலுண்டு பயமில்லை!

வேலுண்டு வினையில்லை! மயிலுண்டு பயமில்லை!

நல்வழி காட்டுகிறார் வாரியார்

● முருகனின் வெற்றி வேலை வழிபட்டால் நம் முன்வினைப் பாவம் ஓடி விடும். மயிலை வணங்கினால் பயம் நீங்கி தைரியம் பிறக்கும்.
● முருகனின் திருவடிகளை நம்பி சரணடைந்தால், வாழ்வில் ஆறுதல்
நிலைத்திருக்கும்.
● கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளத்தையே, தன் இருப்பிடமாக கொண்டிருக்கிறான் முருகன்.
● பலபேர் கூடி கையெழுத்திட்ட விண்ணப்பத்திற்கு, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பர். அதுபோல கூட்டுப் பிரார்த்தனைக்கும்
உடனடியாக தீர்வு அளிப்பார்.
●  குளிக்காவிட்டால் நஷ்டம் நமக்குத்தான், தண்ணீருக்கல்ல. அது போல் கடவுளை நினைக்காவிட்டால் நஷ்டம் நமக்குத்தான்.
● எந்த வேளையும் கடவுளை நினைக்க வேண்டும். அது முடியவில்லையானால், காலையில் எழும்போது, உணவு உண்ணும் போது, இரவு தூங்கும் போதாவது நினைக்க வேண்டும்.
● உலகம் என்னும் கடவுளின் சன்னதியில் நாம் வாழ்கிறோம். அதனால், நல்ல சிந்தனை, சொல், செயல் என்று நம்மை இறைவனோடு மட்டுமே தொடர்புபடுத்திக் கொள்ள வேண்டும்.  
● ஒருவரை பலவிதமான புகைப்படம் எடுப்பது போல, பக்தர்களுக்கு  அருள்புரிய பலவித வடிவங்களில் கடவுள் தோன்றுகிறார்.  
● தேங்காய் உடைத்ததும் வெண்மையான பருப்பு தெரியும். மனதை சுத்தமாக வைத்துக் கொள் என்பதே  இதன் தத்துவம்.
● மற்றவர் தயவில் கிடைக்கும் பால் சோற்றை விட, சுய உழைப்பில் கிடைக்கும்
தண்ணீரும் சோறும் உயர்வானது.
● இரவில் தேவையானதை பகலில் தேடி வைத்துக் கொள்வது போல, முதுமையில் தேவையானதை இளமைக் காலத்தில் தேட வேண்டும்.
● உண்மை பேசுங்கள். தர்மவழியில் வாழ்வு நடத்துங்கள். பெற்றோர், குருவை தெய்வமாக வழிபடுங்கள். இவையே நல்லவர்களின் இயல்பு.
● கடவுள் நமக்குச் செய்வது அத்தனையும் அருள் தான். சில  சமயத்தில் சோதனை போல வாழ்வில் துன்பம் நேருவதாக தோன்றலாம். அதுவும் கூட அறியாமையே.
● உன் குணம் எப்படி இருக்கிறது என ஆய்வு செய்து பார். அதுவே உயர்ந்த பண்பு.
● ஒரு விதை நூறாக பெருகுவது போல, செயலின் பலனும் நூறாக பெருகி நம்மை வந்து சேரும்.
● தெய்வத் தன்மையை அடையவே நாம் பிறந்திருக்கிறோம் எனவே,  உருவத்தில்  மனிதனாகவும், உள்ளத்தில் மிருகமாகவும் இருப்பது கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !