உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாய் சத்சங்கம் சார்பில் சுப்ரமணியருக்கு திருக்கல்யாணம் கோலாகலம்

சாய் சத்சங்கம் சார்பில் சுப்ரமணியருக்கு திருக்கல்யாணம் கோலாகலம்

சூரமங்கலம்: சாய் சத்சங்கம் சார்பில், சேலம், அழகாபுரத்தில் உள்ள, தெய்வீகம் மண்டபத்தில், உலக நன்மை வேண்டி, சண்டி ஹோமம், நேற்று முன்தினம் துவங்கியது. மாலை, 4:30 முதல், இரவு, 8:30 மணி வரை, ஹோமம் நடந்தது. நேற்று காலை, 8:00 மணிக்கு பஜனை, சண்டி ஹோமம் நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, வள்ளி, தெய்வானையுடன், சுப்ரமணியருக்கு கல்யாணம் நடந்தது. அதில், திரளான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். இன்று, நாளை, சாய்பஜனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !