சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி 13ல் துவக்கம்
ADDED :2871 days ago
சிதம்பரம்: சிதம்பரம் சபாநாயகர்கோவில் பொது தீட்சிதர்களின் தில்லை நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில், நான்காம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா, நடராஜர் கோவில் கிழக்கு கோபுரம் அருகே, வரும், 13ம் தேதி துவங்கி, ஐந்து நாட்கள் நடக்கிறது.நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில், 37ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா, வரும், 13ம் தேதி,சிதம்பரம், தெற்கு வீதி, ராஜா அண்ணாமலை செட்டியார் வி.எஸ்.டி., டிரஸ்ட் வளாகத்தில் துவங்கி, ஐந்து நாட்கள் நடக்கிறது. இரண்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகளிலும் பரதம், குச்சுப்பிடி, மோகினி ஆட்டம்,கதகளி, ஒடிசி, மணிபுரி போன்ற நடனங்கள் நடத்தப்படுகின்றன.