சிந்தலவாடி மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்
ADDED :3125 days ago
கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை அடுத்துள்ள சிந்தலவாடி மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்து, மக்கள் வழிபட்டனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே, சிந்தலவாடியில், மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், தை வெள்ளிக்கிழமைகளில், சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. இதன்படி நேற்று காலை நடந்த சிறப்பு பூஜையில், அம்மனுக்கு புத்தம் புதிய ரூபாய் நோட்டுகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தன. இதில், லாலாப்பேட்டை, மகிளிப்பட்டி, குளித்தலை உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.