விநாயகர் பூஜை செய்யும் போது பொரி படைப்பது ஏன்?
ADDED :2824 days ago
விநாயகர் பூஜை செய்யும் போது, நெல்பொரி படைக்க காரணம் என்ன நெல் எனும் மூலப்பொருளில் இருந்து பெறப்படும் பொரி, வெள்ளையாக இருக்கும். உள்ளே வெற்றி டத்துடன், மிகக்குறைந்த எடையுடன் சிறு காற்றில் கூட பறந்து விடும். ஓரிடத்தில் நிலையாக நிற்க முடியாது. ஆனாலும், அது நைவேத்யம் மூலமாக கடவுளை அடைந்து விடுகிறது. ஆனால், உடல் பலம், பணபலம், ஆள்பலம் கொண்ட மனிதன் கடவுளை அடைய எந்த முயற்சியும் எடுப்பதில்லை. எடை குறைந்த பொரி போல, மனதை வெறுமைப்படுத்தி, ஆசைகளை அடக்கி, அதன் வெள்ளை நிறம் போல தூய பக்தியுடன் வழிபட்டால், கடவுளை அடைய முடியும் என்பதை இது உணர்த்துகிறது.