ராக்கப்பெருமாள் கோயிலில் பாரி வேட்டைத்திருவிழா
ADDED :2871 days ago
பரமக்குடி: காட்டுப்பரமக்குடி ராக்கப்பெருமாள் கோயிலில் பாரிவேட்டைத் திருவிழா நடந்தது. நேற்று காலை 7:45 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. 9:00 மணி முதல் அனுக்ஞை, கலச ஸ்தாபனம், பாராயணம் வாசிக்கப்பட்டன. தொடர்ந்து சுதர்சன, தன்வந்திரி, கோபாலகிருஷ்ணன், தனலட்சுமி, நட்சத்திர ஆயுஷ் ேஹாமங்கள் நடந்தன. மதியம் 12:00 மணிக்கு மகா பூர்ணாகுதியும், பின்னர் ராதாகிருஷ்ண பெருமாள், பரிவார தெய்வங்களான கணபதி, மகாலட்சுமி, பூர்ணபுஷ்கலை சமேத சாஸ்தா அய்யனார், ஆஞ்சநேயர், விஷ்ணு துர்க்கை, கருப்பணசாமி, ராக்கச்சி அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு அபிேஷகம், தீபாராதனை நடந்தது.தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பரமக்குடி ராக்கப்பெருமாள் கோவில் பரிபாலன சபை நிர்வாகிகள் செய்திருந்தனர்.