மதகடிப்பட்டு அங்காளபரமேஸ்வரி கோவிலில் தேர் திருவிழா
ADDED :2885 days ago
திருபுவனை: மதகடிப்பட்டு அங்காளபரமேஸ்வரி கோவிலில் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. இதையொட்டி, காலை 11.30 மணிக்கு விநாயகர் பூஜை, மாரியம்மனுக்கு சாலை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. மாலை 3.00 மணிக்கு ஆற்காட்டு அய்யனாரப்பனுக்கு ஊரணி பொங்கல் வைத்து வழிபட்டனர். இரவு ௭:௦௦ மணிக்கு கொடியேற்றத்துடன் தேர் திருவிழா துவங்கியது. இரவு 9.00 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தினமும் இரவு 10.00 ணிக்கு சாமி வீதியுலா நடக்கிறது. முக்கிய விழாவான தேர்திருவிழா வரும் 26ம் தேதி நடக்கிறது.