மதுரை கூடலழகர் கோயிலில் மாசி மகம் தெப்பத்திருவிழா
 மதுரை: மதுரை, கூடலழகர் கோயிலில் மாசி மகம் தெப்பத்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் ஒவ்வொரு நாளும் நடைபெறும் நிகழ்ச்சிகளின் விவரம் ..
நிகழ்ச்சி நிரல்:
18.02.2018 - ஞாயிற்றுக்கிழமை - விஸ்வக்சேனர் புறப்பாடு
மிருத்சங்கிரணம் அங்குரார்ப்பணம் மாலை 7.00 -8.30 மணிக்குள் நடைபெறும்.
முதல்நாள் திருவிழா
19.02.2018 திங்கட்கிழமை: துவஜாரோகணம் கொடியேற்றம் - காலை 9.30 -10.30 மணிக்குள் மேஷ லக்னத்தில் நடைபெறும். 
அன்னவாகனம் ராஜாங்க சேவை - இரவு 7.00 மணிக்கு மாடவீதி புறப்பாடு.
இரண்டாம்நாள் திருவிழா
20.02.2018 செவ்வாய்க்கிழமை - தங்கச் சிவிகையில் ஏகாந்த சேவை - காலை 9.00 மணிக்கு நடைபெறும்.
சிம்ம வாகனம் ராஜாங்க சேவை - இரவு 7.00 மணிக்கு மாடவீதி புறப்பாடு
மூன்றாம்நாள் திருவிழா
21.02.2018 புதன்கிழமை -தங்கச் சிவிகையில் ஏகாந்த சேவை - காலை 9.00 மணிக்கு நடைபெறும்.
அனுமார் வாகனம் - இரவு 7.00 மணிக்கு மாடவீதி புறப்பாடு 
நான்காம்நாள் திருவிழா
22.02.2018 வியாழக்கிழமை -கள்ளர் திருக்கோலம் பல்லக்கு - காலை 11.00 மணிக்கு நடைபெறும்.
மோகினி திருக்கோலம் பக்தி உலா - மாலை 6.00 மணிக்கு நடைபெறும்
கெருட வாகனம் - இரவு 7.00 மணிக்கு தெற்கு ஆவணி மூல வீதியில் இருந்து புறப்பட்டு, இரவு சன்னதிக்கு எழுந்தருளல் நடைபெறும்.
ஐந்தாம்நாள் திருவிழா
23.2.2018 வெள்ளிக்கிழமை -ஏகாந்தசேஷவாகனம் வைகுண்ட நாதர் சேவை - காலை 9.00 மணிக்கு நடைபெறும்
இரவு 7.00 மணிக்கு மாடவீதி புறப்பாடு 
ஆறாம்நாள் திருவிழா
24.02.2018 சனிக்கிழமை - ஏகாந்த சேவை - காலை 9.00 மணிக்கு நடைபெறும்
யானை வாகனம் - இரவு 7.00 மணிக்கு மாடவீதி புறப்பாடு
இரவு ஆண்டாள் சன்னதியில் பெருமாளும் ஆண்டாளும் மாலை மாற்றுதல்
ஏழாம்நாள் திருவிழா
25.02.2018 ஞாயிற்றுக்கிழமை -எடுப்புச் சப்பரம், உபய நாச்சியாருடன் வேணுகோபாலன் திருக்கோலம்
இரவு 7.00 மணிக்கு மாடவீதி புறப்பாடு 
எட்டாம்நாள் திருவிழா
26.02.2018 திங்கட்கிழமை -ஏகாந்த சேவை - காலை 9.00 மணிக்கு நடைபெறும்
குதிரை வாகனம் ராஜாங்க சேவை இரவு 7.00 மணிக்கு மாடவீதி புறப்பாடு 
ஒன்பதாம்நாள் திருவிழா
27.02.2018 செவ்வாய்க்கிழமை -உபய நாச்சியாருடன் தங்க சிவிகை - இரவு 7.00 மணிக்கு மாடவீதி புறப்பாடு
துவஜா அவரோகணம் (இரவு கொடியிறக்கம்) நடைபெறும் 
பத்தாம்நாள் திருவிழா
28.02.2018 புதன்கிழமை -அலங்கார திருமஞ்சனம்  - மாலை 4.35 மணிக்கு புறப்பாடு
இரவு 7.00 மணியளவில் - ஏகாந்த சேவை பல்லக்கில் தெப்பம் முட்டுத் தள்ளுதல்
பதினொன்றாம்நாள் திருவிழா
01.03.2018 வியாழக்கிழமை -அலங்கார திருமஞ்சனம் - காலை 9.00 மணிக்கு நடைபெறும் 
தங்கச் சிவிகையில் பெருமாள் புறப்பாடு - மாலை 5.00 மணிக்கு நடைபெறும்.
உபயநாச்சியாருடன் தெப்பத்துக்குள் சுற்றுதல் - இரவு 7.45 மணிக்கு நடைபெறும்.
02.03.2018 வெள்ளிக்கிழமை -உத்ஸவசாந்தி