உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரிய மாரியம்மன் கோவில் விழா: கடைகளுக்கு நாளை மீண்டும் ஏலம்

பெரிய மாரியம்மன் கோவில் விழா: கடைகளுக்கு நாளை மீண்டும் ஏலம்

ஈரோடு: ஈரோடு பெரியமாரியம்மன் கோவில் விழா வரும், 20ல் தொடங்கி, ஏப்.,8ல் முடிகிறது. இதையொட்டி, அறநிலையத்துறை சார்பில், பிரப் ரோட்டில் தற்காலிக, திருவிழா கடைகள் நடத்த ஏலம் விடப்படுகிறது. கடந்த பிப்.,28ல் 40 கடைகளுக்கான ஏலம் அறிவிக்கப்பட்டது. ஆனால், நடக்கவில்லை. இதனால் ஒத்தி வைக்கப்பட்ட ஏலம், நாளை நடக்கிறது. இம்முறையாவது நடக்குமா அல்லது சின்டிகேட் அமைத்து, ஏலத்தை தடுத்து விடுவார்களா என, அறநிலையத்துறை அதிகாரிகள் புலம்பி வருகின்றனர். இதுகுறித்து முன்னாள் கவுன்சிலர் ஒருவர் கூறியதாவது: தற்போது, 10 கடைகளுக்கு ஒரே டெண்டர் விடுவதால், சாதாரண வியாபாரிகள், ஒரு கடையை மட்டும் எடுக்க விரும்புவர்கள், ஏலம் எடுக்க முடியாது. டிபாசிட் தொகை அதிகம். தற்போது பிரப் ரோட்டில், மழை நீர் வடிகால் அமைப்பு, மேம்பால பணி நடக்கிறது. இதனால் விற்பனை அதிகம் இருக்காது. எனவே, கூடுதல் பணம் செலுத்தி, டெண்டர் எடுக்க அச்சமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அறநிலையத்துறையும் தற்போதுள்ள, போக்குவரத்து சூழலை கருத்தில் கொண்டு, விரைவில் டெண்டர் விட்டு, கோவிலுக்கு வருமானத்தை ஈட்ட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !