முனீஸ்வரர் கோவில் திருவிழா
ADDED :2803 days ago
ஓசூர்: ஓசூர் முனீஸ்வரர் நகர் பகுதியில், முனீஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலின், 13ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில், முனீஸ்வர சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து சுவாமியை வழிபட்டனர். கிடா வெட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில், உற்சவரின் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.