சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோயிலைச்சுற்றி நடைபாதை
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலைச்சுற்றி நடைபாதை அமைக்க பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சிவகங்கை தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு தினமும் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தரிசனத்திற்கு பிறகு கோயிலை வலம் வருவது வழக்கம். அப்படி வருபவர்கள் நான்குரத வீதிகளின் வழியாக வரும் போது, வடக்கு ரதவீதி மாநில நெடுஞ்சாலையாக உள்ளதால் அதில் வேகமாக செல்லும் வாகனப்போக்குவரத்து காரணமாக பக்தர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதனால் அவர்கள் மேற்கு, வடக்கு பகுதியில் கோயில் சுற்றுச்சுவர் ஓரத்திலேயே வலம் வருகின்றனர். அப்பகுதியில் புதர்கள் நிறைந்து இருட்டாக இருப்பதால் அஞ்சியே நடக்க வேண்டியுள்ளது. எனவே கோயிலுக்கு வெளியே சுற்றுச்சுவரை ஒட்டி தார்சாலை அமைத்தால் கோயிலை வலம் வருபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் குறைந்தபட்சம் மேற்கு, வடக்கு பகுதியில் மட்டுமாவது சாலை அமைத்து அதை கிழக்கு, தெற்கு ரத வீதியோடு இணைக்கலாம். எனவே பக்தர்களின் நலன்கருதிகோயில் நிர்வாகமும், பேரூராட்சி நிர்வாகமும் இணைந்து இந்த நடவடிக்கையை எடுக்கவேண்டும், என்றார்.