உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் விழா நாளை தொடக்கம்

காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் விழா நாளை தொடக்கம்

காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி - பங்குனி விழா நாளை தொடங்குகிறது. காலை 5:45 மணிக்கு கொடியேற்றமும், அதனை தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.முக்கிய நிகழ்ச்சியான பால்குடம் எடுத்தல், பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி வருகிற 21-ம் தேதி காலை 9:30 மணிக்கு நடக்கிறது. விழா நாட்களில் ஒவ்வொரு நாள் மாலை 6:30 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிசேகம் ஆராதனையும், இரவு கலை நிகழ்ச்சியும் நடக்கிறது.ஏற்பாடுகளை இணை ஆணையர் செந்தில்வேலவன் தலைமையில் உதவி ஆணையர் ராமசாமி, செயல் அலுவலர் அகிலாண்டேஸ்வர், கணக்கர் அழகு பாண்டி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !