உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடாரண்யேஸ்வரர் கோவில் பங்குனி பிரம்மோற்சவ விழா: வரும் 21ல் கொடியேற்றம்

வடாரண்யேஸ்வரர் கோவில் பங்குனி பிரம்மோற்சவ விழா: வரும் 21ல் கொடியேற்றம்

திருவாலங்காடு : வடாரண்யேஸ்வரர் கோவிலில், வரும், 21ம் தேதி, பங்குனி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கி, அடுத்த மாதம், 9 வரை நடைபெறுகிறது. திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலான, வடாரண்யேஸ்வர சுவாமி கோவில், திருவாலங்காட்டில் உள்ளது. இக்கோவிலின் நடப்பாண்டிற்கான பங்குனி மாத பிரம்மோற்சவ விழா, 21ம் தேதி காலை, 9:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.முன்னதாக, 19ல், பந்தக்கால் நடும் நிகழ்ச்சியும், 20ம் தேதி இரவு, மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதியுலாவும் நடைபெறுகிறது.அடுத்த மாதம், 9 வரை, தினமும், காலை மற்றும் இரவு நேரத்தில், ஒவ்வொரு வாகனத்திலும் உற்சவர் சோமாஸ்கந்தர், சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முக்கிய நிகழ்வான கமலத் தேர் திருவிழா, இம்மாதம், 27ம் தேதியும், 28ல் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. மேலும், தினமும் காலையில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறும்.

தேதி      நேரம்     உற்சவ விழா
மார்ச் 19     காலை, 9:00 மணி      பந்தக்கால்
மார்ச் 20     இரவு, 7:00 மணி      மூஷிக வாகனம்
மார்ச் 21     காலை, 9:30 மணி      கொடியேற்றம் இரவு, 8:00 மணி    சிங்க வாகனம்
மார்ச் 22     காலை, 9:00 மணி     சூரிய பிரபை இரவு, 8:00 மணி    சந்திர பிரபை
மார்ச் 23     காலை, 9:00 மணி      அன்ன வாகனம்     இரவு, 8:00 மணி     பூத வாகனம்
மார்ச் 24     காலை, 9:00 மணி      பல்லக்கு சேவை     இரவு, 8:00 மணி    நாக வாகனம்
மார்ச் 25     காலை, 10:00 மணி      மகர வாகனம் இரவு, 8:00 மணி    மூஷிக மயில் ரிஷப வாகனம்
மார்ச் 26     மாலை, 3:00 மணி      புலி வாகனம் இரவு, 8;00 மணி    யானை வாகனம்
மார்ச் 27      காலை,9:30 மணி      கமலத் தேரில் சுவாமி உலா இரவு, 9:00 மணி    கேடயம் உலா
மார்ச் 28     மாலை, 5:00 மணி      கேடயம் இரவு, 9:00 மணி திருக்கல்யாணம், இரவு, 10:00 மணி அபிஷேகம்
மார்ச் 29      மாலை, 4:30 மணி      கேடயம் இரவு, 10:00 மணி    அபிஷேகம் விடிய சப்த பதம்
மார்ச் 30     காலை, 7:00 மணி      கேடய உலா மாலை, 5:00 மணி    கேடய உலா
மார்ச் 31     காலை, 10:00 மணி      சாந்தி அபிஷேகம் மாலை, 5:00 மணி-    திருஊடல் உற்சவம்
ஏப்., 1     இரவு,10:00 மணி      புஷ்பநாக ஊஞ்சல்
ஏப்., 2      இரவு, 10:00 மணி      காரைக்கால் அம்மையார் உலா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !