காளியம்மன் கோவிலில் அர்ச்சகர்கள் சிறப்பு வழிபாடு
ADDED :2849 days ago
குமாரபாளையம்: குமாரபாளையம், காளியம்மன் கோவிலில் அர்ச்சகர்கள் சார்பில் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை வழிபாடு நடத்தப்பட்டது. குமாரபாளையம், காளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் அர்ச்சகர்கள் சார்பில் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை வழிபாடு நடத்தப்படும். நேற்று, கோவில் அர்ச்சகர்கள் சார்பில் பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. அதன்பின் சிறப்பு அலங்கார, ஆராதனை வழிபாடு நடத்தப்பட்டது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில், அம்மன் திருவீதி உலா நடந்தது. ராஜா வீதி, சேலம் மெயின் ரோடு, தம்மண்ணன் வீதி, புத்தர் வீதி, கலைமகள் வீதி வழியாக, மீண்டும் கோவில் வளாகத்தில் நிறைவு பெற்றது.