மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டுதல் விழா கோலாகலம்
ADDED :2767 days ago
பெ.நா.பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் அருகே, ஏத்தாப்பூரில், வசிஷ்ட நதிக்கரை, சமயபுரம் மாரியம்மன் கோவிலில், பூச்சாட்டுதல் விழா, நேற்று, கோலாகலமாக நடந்தது. அதையொட்டி, காலை, 5:00 மணிக்கு, கஜ, கோ, அஸ்வ பூஜை, 7:00 மணிக்கு, பம்பை மேளம் முழங்க, மலர் கூடைகளுடன், ஏராளமான பக்தர்கள், முக்கிய வீதிகள் வழியாக, கோவிலுக்கு ஊர்வலம் வந்தனர். தொடர்ந்து, சுவாமி பாதத்தில் மலர்கள் சமர்ப்பிக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. சுற்று வட்டார கிராம மக்கள், சுவாமியை தரிசித்தனர்.