உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொதட்டூர்பேட்டையில் தீமிதி திருவிழா

பொதட்டூர்பேட்டையில் தீமிதி திருவிழா

ஆர்.கே.பேட்டை : திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. இதில், காப்பு கட்டி விரதம் மேற்கொண்டிருந்த திரளான பக்தர்கள், அக்னி குண்டத்தில் இறங்கி, தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். பொதட்டூர்பேட்டை திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா, கடந்த மாதம், 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்றே ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவங்கினர். தினசரி மகாபாரத சொற்பொழிவு மற்றும் தெருக்கூத்து உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இந்நிலையில், வெள்ளிக்கிழமை மதியம் அர்ச்சுனன் தபசு நடந்தது. இறுதி நாளான நேற்று காலை, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், பீமசேனன், துரியோதனனை அழித்து வெற்றி பெற்றார்.மாலை 6:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் மூட்டப்பட்ட அக்னி குண்டத்தில், திரவுபதியம்மன் இறங்கினார். உடன், காப்பு கட்டி விரதம் மேற்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் அக்னி குண்டத்தில் இறங்கி, தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இன்று, திங்கட்கிழமைகாலை, தர்மராஜா பட்டாபிஷேகம் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !