கணவன் மனைவி அன்பை பலப்படுத்தும் மந்திரம்!
ADDED :3069 days ago
திருமணச் சடங்கில் மணமகளின் காலை மணமகன் பற்றிக் கொள்ள, பெண் ஏழு அடிகள் எடுத்து வைப்பாள். அப்போது, "சப்தபதி என்னும் மந்திரம் சொல்லப்படும். "சப்தம் என்றால் "ஏழு. "ஏழு அடிகளை கடந்த நீ, என் தோழியாகவும் நண்பர்களாகவும் வாழ்வோம். அன்பும், உயர்ந்த மனமும், ஒருமித்த கருத்தும் கொண்டவர்களாக நாம் இருப்போம். நல்ல மழலைச் செல்வமும், செல்வ வளமும் பெறுவதற்காக நீ என்னுடன் வருவாயாக என்பதாகும். இந்த மந்திரத்திற்கு "சகா மந்திரம் என்றும் பெயருண்டு. "சகா என்றால் "உறவு அல்லது "நட்பு. கணவன் மனைவி இடையே அன்பை பலப்படுத்த இது சொல்லப்படுகிறது.