பலத்த காற்று.. பழநியில் ’ரோப்கார்’ நிறுத்தம்
ADDED :2848 days ago
பழநி: பழநியில் நேற்று பலத்த காற்று வீசியதால், மலைக்கோயில் ’ரோப்கார்’ அடிக்கடி நிறுத்தப்பட்டது. பழநி மலைக்கோயிலுக்கு எளிதாக பக்தர்கள் செல்லும் வகையில், ரோப்கார், வின்ச்-கள் இயக்கப்படுகிறது. நேற்று பழநியில் பலத்த காற்று வீசியதால், காலை 11:00 மணிக்கு ’ரோப்கார்’ நிறுத்தப்பட்டது. மதிய இடைவேளைக்கு பின் பகல் 3:00 மணிக்கு மேல் காற்று காற்று குறைந்தபோது இயக்கப்பட்டது. கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,’40 கி.மீ., வேகத்திற்கு அதிகமாக மலைப்பகுதியில் காற்று வீசுவதால், ரோப்கார் இயங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. காற்று குறைந்தவுடன் வழக்கம் போல் இயக்கப்பட்டது. வின்ச், படிப்பாதை, யானைப்பாதை மூலம் செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.