உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவக்கரை கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை

திருவக்கரை கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை

திருச்சிற்றம்பலம் கூட்ரோடு: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள், திருவக்கரை வக்கிரகாளியம்மனுக்கு, பூஜைகள் செய்தனர்.

வானுார் அருகே எறையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் வரும் 16ம் தேதி அரசு பொதுத் தேர்வை முதன் முறையாக எழுத உள்ளனர். இதனால் பள்ளி நிர்வாகம் சார்பில், மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்வில் வெற்றி பெற வேண்டி, நேற்று காலை 11:00 மணிக்கு, பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் திருவக்கரை வக்கிரகாளிம்மன், சந்திரமவுலீஸ்வரர், பெருமாள் ஆகிய சாமிகள் முன்பு தேர்வு நுழைவு சீட்டினை வைத்து, சிறப்பு பூஜைகள் செய்து வழிப்பட்டனர். இதில், பள்ளி தலைமை ஆசிரியர் காந்தி, உடற்பயிற்சி ஆசிரியர் மோகன்குமார், ஆசிரியர்கள் சூர்யா, மோகனமுருகன், கலா, சேகர், அபினையன், சீனுவாசன், வசந்தி உள்பட ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்துக் கொண்டனர். தேர்வில் வெற்றி பெற, பள்ளி மாணவர்கள், சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !