ஷீரடி சாயிபாபா கோயிலில் இனிக்கும் வேம்பு!
ADDED :2803 days ago
பகவான் ஷீரடி சாயிபாபாவின் ஜீவ சமாதி அமைந்துள்ள இடம் ஷீரடி. இத்திருத்தலத்தில் உள்ள ஒரு வேப்ப மரம் மிகவும் சக்தி கொண்டதாகக் கருதப்படுகிறது. வழக்கமாக, வேப்ப மரத்தின் இலைகள் கசப்புத் தன்மை கொண்டவை. ஆனால், ஷீரடி சாயி பாபா கோயிலில் உள்ள வேப்ப மரத்தின் ஒரு பகுதி கசப்புக்கு மாறாக இனிப்பது இங்கு வரும் பக்தர்களை அதிசயிக்க வைக்கிறது. இதன் மற்றொரு பகுதி இலைகள் வழக்கம் போல் கசக்கின்றன. இந்த அதிசய வேப்பிலையை சாயி பாபாவின் அருட்பிரசாதமான உதியுடன் (விபூதி) கலந்து உட்கொண்டால் எந்தவித நோயும் பறந்து போய் விடுவதாகக் கூறப்படுகிறது.