உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி கோவிலில் ஸ்தபதிகள் தேர்வு

மதுரை மீனாட்சி கோவிலில் ஸ்தபதிகள் தேர்வு

மதுரை: மதுரை, மீனாட்சி கோவில் தீ விபத்தில், பாதிக்கப்பட்ட பகுதியில், புனரமைப்பு பணிக்கு, ஸ்தபதிகளை தேர்வு செய்வது குறித்து, உயர் மட்டக்குழு நேற்று ஆலோசனை நடத்தியது.இக்கோவிலில், பிப்., 2ல், இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அதில் பழமையும், புராதன சிறப்பும் மிக்க வீர வசந்தராய மண்டபத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி புனரமைப்பு பணியை விரைவு படுத்த, பொதுப்பணித் துறை ஓய்வு முதன்மை பொறியாளர், பாலசுப்பிரமணியன் தலைமையில், 12 பேர் இடம் பெற்றுள்ள உயர் மட்டக்குழுவை, அரசு அமைத்தது. நான்கு வாரத்தில் ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்ய, இக்குழு ஏற்கனவே இரண்டு முறை ஆய்வு நடத்தியது. மூன்றாவது முறையாக நேற்று மீண்டும் ஆய்வு நடத்தப்பட்டது.சிதிலமடைந்த வீர வசந்தராய மண்டபத்தை, கலையம்சம் மாறாமல் புனரமைக்க ஸ்தபதிகள் தேர்வு செய்து, அரசின் ஒப்புதலுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !