உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மலைக்கோட்டை கோவிலில் தெப்பத்திருவிழா துவக்கம்

மலைக்கோட்டை கோவிலில் தெப்பத்திருவிழா துவக்கம்

திருச்சி: திருச்சி, மலைக்கோட்டை, தாயுமான சுவாமி கோவில் தெப்பத்திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. திருச்சி, காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள, பாடல் பெற்ற, தாயுமானவ சுவாமி கோவிலில், தெப்பத்திருவிழா, நேற்று மாலை, 6:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, இரவு 7:௦௦ மணிக்கு சுவாமி திருவீதி உலா நடந்தது. வரும், 28ம் தேதி வரை, காலை, 8:௦௦ மணிக்கும், இரவு, 7:௦௦ மணிக்கும், பல்வேறு வாகனங்களில், சுவாமி திருவீதியுலா நடைபெறும். 29ம் தேதி இரவு, பிரம்ம தீர்த்த தெப்பக்குளத்தில், சுவாமியும், அம்பாளும் தெப்ப உற்சவம் கண்டருள்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !