காளஹஸ்தி கோவிலில் ரூ.84.48 லட்சம் வசூல்
ADDED :2800 days ago
நகரி : காளஹஸ்தி வாயுலிங்கேஸ்வரர் கோவிலில், 20 நாட்களில், 84.48 லட்சம் ரூபாய், காணிக்கையாக கிடைத்துள்ளது. சித்துார் மாவட்டம், காளஹஸ்தியில், வாயுலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்து, தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, ரொக்கம், வெள்ளி மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை உண்டியலில் செலுத்துகின்றனர்.அவ்வகையில், 20 நாட்களில், பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையை, கோவில் அதிகாரி, பிரம்மராம்பா முன்னிலையில், ஊழியர்கள் எண்ணினர். இதில், 84 லட்சத்து, 48 ஆயிரத்து, 728 ரூபாய் ரொக்கமும், 315 கிலோ வெள்ளியும், 137 வெளிநாட்டு கரன்சிகளும் இருந்தன.