சீர்காழி சீரடிசாய்பாபா கோயிலில் சிறப்பு வழிபாடு
மயிலாடுதுறை: சீர்காழி சீரடிசாய்பாபா கோயிலில் ராமநவமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே தென்பாதியில் சீரடிசாய்பாபா கோயில் உள்ளது. இக்கோயிலில் ராமநவமியையொட்டி கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், விருட்சிந்திய ஹோமம், தன்வந்திரி ஹோமம், லெட்சுமி ஹோமம் நடைப்பெற்று, பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து ஹோமத்தில் வைக்கப்பட்ட புனிதநீர் கடங்கள் கோயிலை வலம் வந்து, சீரடி சாய்பாபாவிற்கு மஞ்சள், திரவியபொடி, பால், தயிர், தேன், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம் முதலான பொருட்கள் மற்றும் புனிதநீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் ம லர்களால் அலங்காரம், தீபாராதனை நடைப்பெற்றது. முன்னதாக பால்குடங்கள் ஊர்வலமாக எடுத்துவந்த பக்தர்கள் தங்களது கைகளால் சாய்பாபாவிற்கு அபிஷேகம் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.