உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரையில் ராமநவமியை முன்னிட்டு லட்சார்ச்சனை

மதுரையில் ராமநவமியை முன்னிட்டு லட்சார்ச்சனை

மதுரை : மதுரையில் சின்மயா மிஷன், ஆஸ்திக சபை சார்பில் ராமநவமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.விநாயகர் பூஜையுடன் ராமர் பூஜை, அஷ்டோத்தர சகஸ்ரநாம அர்ச்சனை, விளக்கு பூஜை, லட்சார்ச்சனை நடந்தன. பிராமணர் சங்கம் கோச்சடை கிளை சார்பில் விளம்பி தமிழ் ஆண்டு பஞ்சாங்கம் வெளியிடப்பட்டது. சங்க தலைவர் குரு பிரசாத், மகளிர் அணி தலைவர் சுதா, சுவாமி சிவயோகானந்தா, லயன்ஸ் சங்க முன்னாள் ஆளுனர் நந்தகுமார், தொழிலதிபர்கள் லட்சுமி நரசிம்மன், சத்யமூர்த்தி, சங்கரநாராயணன், கிருஷ்ணய்யர், வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் பங்கேற்றனர். சங்க பொதுச் செயலாளர் சுந்தரேசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !